யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல்
ஜெய்ப்பூர் (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008   ( 12:59 IST )
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் நாளை ஒரே கட்டமாக 200 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாஜக ஆட்சியின் கீழ் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த சட்டப் பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 200. இங்கு அனைத்து இடங்களுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 154 பெண்கள் உட்பட மொத்தம் 2,194 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

நாளைய தேர்தலில் 1.72 கோடி பெண்கள் உட்பட மொத்தம் 3.62 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 42,500 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் களத்தில் பலர் நின்றாலும், பிரதான போட்டி ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் நிலவுகிறது. பாஜக 193 தொகுதிகளிலும், காங்கிரஸ் 200 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 200 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ஜல்ரபந்த் தொகுதியிலும், முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் வேட்பாளருமான அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

நாளைய வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மும்பைத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, பதற்றம் நிறைந்த தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதலாக பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டெல்லி வந்தார் காண்டலீஸா ரைஸ்
தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை: பிரதமர் உறுதி
பாக்.மீது ராணுவ நடவடிக்கை இல்லை : பிரணாப்
பாதுகாப்பு நிலவரம்: அமைச்சரவைக்குழு ஆலோசனை
மிஷோராம் தேர்தல்: 2 மணி நேரத்தில் 15% வாக்குப்பதிவு!
தமிழக எம்.பி-க்கள் பிரதமருடன் இன்று சந்திப்பு
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...