யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
டெல்லி வந்தார் காண்டலீஸா ரைஸ்
புதுடெல்லி (ஏஜென்சி), 3 டிசம்பர் 2008   ( 11:25 IST )
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீஸா ரைஸ், ஒருநாள் பயணமாக இன்று டெல்லி வந்து சேர்ந்தார். மாலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை 10.30 மணியளவில் வந்து சேர்ந்த ரைஸை, இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.

மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது இந்தியா வந்துள்ள ரைஸ், இச்சம்பத்தில் உயிரிழந்த மக்களுக்கு அமெரிக்கா சார்பில் அனுதாபம் தெரிவிப்பார் எனத் தெரிகிறது.

பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வது, இதில் அமெரிக்கா உதவுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ள காண்டலீஸா ரைஸ், சம்பவம் நடந்த மும்பை நகருக்கோ அல்லது பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரைஸின் இந்தியப் பயணம் குறித்த நிகழ்ச்சி விவரங்கள் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும் இன்று மாலை பிரதர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை: பிரதமர் உறுதி
பாக்.மீது ராணுவ நடவடிக்கை இல்லை : பிரணாப்
பாதுகாப்பு நிலவரம்: அமைச்சரவைக்குழு ஆலோசனை
மிஷோராம் தேர்தல்: 2 மணி நேரத்தில் 15% வாக்குப்பதிவு!
தமிழக எம்.பி-க்கள் பிரதமருடன் இன்று சந்திப்பு
டெல்லி வரும்படி விலாஸ்ராவுக்கு காங்.மேலிடம் அழைப்பு
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...