|
| தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை: பிரதமர் உறுதி |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008 ( 09:54 IST ) | |
இலங்கை போரில் தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தன்னைச் சந்தித்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையில் ஏதுமறியாத அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று மாலை சந்தித்தனர்.
திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 34 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 9 மாநிலங்களவை உறுப்பினர்கள் அடங்கிய இக்குழு, 5 பக்க மனுவை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தது.
அந்த மனுவில், 'இலங்கை தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுவது தமிழ் மக்களை வேதனையடையச் செய்துள்ளது. இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும் இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படவில்லை. தமிழினத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் இலங்கை பிடிவாதமாக உள்ளது.
இலங்கை தமிழர்களை காப்பாற்ற, தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் போரை உடனே நிறுத்த மத்திய அரசு தலையிட வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இம்மனுவை பெற்றுக் கொண்டு பதிலளித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுப்பதாகவும், இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு தன்னை சந்திக்க வரும்போது ஆலோசனை நடத்துவதாகவும் உறுதியளித்தார்.
இந்த குழுவில் அமைச்சர் டி.ஆர். பாலு, ராசா, கனிமொழி, ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், அன்புமணி ராமதாஸ் உள்ளிடவர்கள் இடம்பெற்றிருந்தனர். அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|