|
| பாக்.மீது ராணுவ நடவடிக்கை இல்லை : பிரணாப் |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 டிசம்பர் 2008 ( 16:01 IST ) | |
மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எதையும் இந்தியா மேற்கொள்ளாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்காக இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாகித் மாலிக்கை நேற்று மாலை நேரில் அழைத்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி,மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இது தொடர்பாக தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை அளித்து அவர்களை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்த நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரணாப் முகர்ஜியிடம் இது குறித்து கேட்கப்பட்டது.
அப்போது அவர், மும்பை தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எதையும் மேற்கொள்வது குறித்து இந்தியா பரிசீலிக்கவில்லை என்றார்.
தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்துள்ள நிலையில், அதற்கு எத்தகைய நடவடிக்கையை அந்நாடு மேற்கொள்கிறது என்பதை அறிய இந்தியா காத்துக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே இதேபோன்ற ஒரு பட்டியலை இந்தியா அளித்திருந்தது.ஆனால் அதன் மீது பாகிஸ்தான் எந்த ஒரு நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்று பிரணாப் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|