யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பாதுகாப்பு நிலவரம்: அமைச்சரவைக்குழு ஆலோசனை
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 டிசம்பர் 2008   ( 13:41 IST )
உள்நாட்டு பாதுகாப்பு, பெடரல் புலனாய்வு அமைப்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடியது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், அவரது இல்லத்தில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, உள்துறை செயலாளர் மதுகர் குப்தா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உள்துறை அமைச்சராக சிதம்பரம் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக நடைபெறும் இக்கூட்டத்தில், உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.

உள்நாட்டு பாதுகாப்புகாக ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள பெடரல் புலனாய்வு அமைப்பு குறித்தும், பயங்கரவாதத்தை தடுக்க சட்டத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டு வருவது குறித்தும் இதில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மிஷோராம் தேர்தல்: 2 மணி நேரத்தில் 15% வாக்குப்பதிவு!
தமிழக எம்.பி-க்கள் பிரதமருடன் இன்று சந்திப்பு
டெல்லி வரும்படி விலாஸ்ராவுக்கு காங்.மேலிடம் அழைப்பு
அஸ்ஸாம்: ரயிலில் குண்டு வெடித்து 2 பேர் பலி
மும்பை வந்தார் பிரதிபா பாட்டீல்
பய‌ங்கரவாதத்துக்கு ப‌திலடி கொடு‌‌ப்போ‌ம் : ப.‌சித‌ம்பர‌ம்
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...