|
| மிஷோராம் தேர்தல்: 2 மணி நேரத்தில் 15% வாக்குப்பதிவு! |
| ஐஷாவல் (ஏஜென்சி), 2 டிசம்பர் 2008 ( 12:08 IST ) | |
மிஷோராம் சட்டசபைக்கு நடைபெற்று வரும் தேர்தலில் 2 மணி நேரத்தில் 15 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
40 உறுப்பினர்களை கொண்ட மிஷோராம் மாநில சட்டசபை தேர்தல் இன்று காலை தொடங்கியது. மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும், மிசோ தேசிய முன்னணியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியும் தேர்தல் களத்தில் உள்ளது.
இந்த தேர்தலில் மொத்தம் 6 லட்சத்து 11 ஆயிரத்து 124 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக, மொத்தம் 1,026 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 பெண் வேட்பாளர்கள், 36 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 205 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தேர்தலை முன்னிட்டு மாநிலத்தையொட்டி உள்ள மணிப்பூர், அஸ்ஸாம், திரிபுரா எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முதல் 2 மணி நேரத்தில் 15 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|