யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
தமிழக எம்.பி-க்கள் பிரதமருடன் இன்று சந்திப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), 2 டிசம்பர் 2008   ( 11:18 IST )
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த வலியுத்தி தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து வலியுறுத்தவுள்ளனர்.

இலங்கை பிரச்னை தொடர்பாக கடந்த 25 ஆம் தேதி சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி கூட்டியிருந்தார்.

இந்த கூட்டத்தில், முதல்வர் கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு ஒன்று வரும் 4 ஆம் தேதி பிரதமரைச் சந்திப்பது என்றும், அதற்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரதமரைச் சந்தித்து முறையிடுவது என்றும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 34 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 9 மாநிலங்களவை உறுப்பினர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்துப் பேசுகின்றனர்.

பிரதமரை சந்திக்கும் குழுவில் இடம் பெறப்போவதில்லை என்று அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டெல்லி வரும்படி விலாஸ்ராவுக்கு காங்.மேலிடம் அழைப்பு
அஸ்ஸாம்: ரயிலில் குண்டு வெடித்து 2 பேர் பலி
மும்பை வந்தார் பிரதிபா பாட்டீல்
பய‌ங்கரவாதத்துக்கு ப‌திலடி கொடு‌‌ப்போ‌ம் : ப.‌சித‌ம்பர‌ம்
பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவோம்: மன்மோகன்
மும்பை தாக்குதல் விவரம்: பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டது
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...