யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
டெல்லி வரும்படி விலாஸ்ராவுக்கு காங்.மேலிடம் அழைப்பு
மும்பை (ஏஜென்சி), 2 டிசம்பர் 2008   ( 11:17 IST )
மும்பை பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, மகாராஷ்டிரா மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் பதவி விலக முன்வந்துள்ள நிலையில், அவரை டெல்லிக்கு வரும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல்கள் ஓய்ந்து, நகரில் இயல்பு நிலை திரும்பிவிட்டாலும், இந்த சம்பவம் எதிரொலியாக ஏற்பட்டுள்ள அரசியல் அதிரடி திருப்பங்கள் இன்னும் ஓயவில்லை.

இந்த தாக்குதலுக்கு தார்மீக பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சிவராஜ் பாட்டீலும், மாநில துணை முதல்வர் பொறுப்பிலிருந்து ஆர்.ஆர். பாட்டீலும் விலகியுள்ளனர். மகாராஷ்டிரா மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய முதல்வரை நியமிக்கும் வரை, விலாஸ்ராவ் தேஷ்முக் அந்த பதவியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் விவகாரம் தொடர்பாக விலாஸ்ராவ் தேஷ்முக் மீது காங்கிரஸ் மேலிடத்தில் கடும் அதிருப்தி ஏற்பட்நிலையில், தாக்குதல் ஓய்ந்த பின்னர் தாஜ் ஓட்டலை சுற்றிப் பார்த்த தேஷ்முக் தன்னுடன் தனது மகனும், நடிகருமான ரிதிஷ் மற்றும் இயக்குனர் ராம்கோபால் வர்மா ஆகியோரை அழைத்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மும்பை தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ரிதிஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ராம்கோபால் வர்மா இயக்கவுள்ளதாகவும், இதற்காகவே அவர்களையும் விலாஸ்ராவ் தேஷ்முக் தன்னுடன் தாஜ் ஓட்டலுக்கு அழைத்து வந்ததாகவும் கூறப்பட்டது.

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற கதையாக, இந்த புகார் காங்கிரஸ் மேலிடத்துக்கு மேலும் கோபத்தை கிளறியது. இதன் காரணமாக, விலாஸ்ராவ் தேஷ்முக்கை உடனடியாக டெல்லி வரும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டது.

இதனால், இன்று பிற்பகல் தேஷ்முக் டெல்லி புறப்படுவார் என தெரிகிறது. அதற்கு முன்னதாக மும்பை வந்துள்ள குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் மற்றும் மாநில ஆளுனர் ஆகியோரையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார் விலாஸ்ராவ் தேஷ்முக்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அஸ்ஸாம்: ரயிலில் குண்டு வெடித்து 2 பேர் பலி
மும்பை வந்தார் பிரதிபா பாட்டீல்
பய‌ங்கரவாதத்துக்கு ப‌திலடி கொடு‌‌ப்போ‌ம் : ப.‌சித‌ம்பர‌ம்
பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவோம்: மன்மோகன்
மும்பை தாக்குதல் விவரம்: பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டது
தாஜ் ஓட்டல் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...