யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அஸ்ஸாம்: ரயிலில் குண்டு வெடித்து 2 பேர் பலி
திஸ்பூர் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 டிசம்பர் 2008   ( 10:51 IST )
அஸ்ஸாம் மாநிலத்தில், இன்று காலை ரயிலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

கவுஹாத்தி - தின்ஷுக்யா இடையே செல்லும் பாசஞர் ரயிலில் இன்று காலை 7.50 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. திபு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் வண்டியின் 3-வது பெட்டியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 17 பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் திபு சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வருவோரில் சிலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மும்பை வந்தார் பிரதிபா பாட்டீல்
பய‌ங்கரவாதத்துக்கு ப‌திலடி கொடு‌‌ப்போ‌ம் : ப.‌சித‌ம்பர‌ம்
பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவோம்: மன்மோகன்
மும்பை தாக்குதல் விவரம்: பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டது
தாஜ் ஓட்டல் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
மகாராஷ்ட்ரா அடுத்த முதல்வர் ஷிண்டே ?
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...