யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
தாஜ் ஓட்டல் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
மும்பை (ஏஜென்சி), 1 டிசம்பர் 2008   ( 18:06 IST )
பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பின்னர் பாதுகாப்பு ஏஜென்சியினரின் வசமிருந்த மும்பை தாஜ் ஓட்டல் மற்றும் தாஜ் மஹால் பேலஸ் ஆகியவை இன்று நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த புதன் கிழமை இரவு மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல், ஓபராய் ஹோட்டல் உட்பட 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 22 வெளிநாட்டவர்கள் உட்பட 183 பேர் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினர் மூன்று நாளாக நடத்திய கடும் போராட்டத்தில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் பின்னரே பீதியில் உறைந்திருந்த மும்பை நகரவாசிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில் 4 நாட்களுக்குப் பின் மும்பை நகரில் இன்று காலை முதல் இயல்பு நிலை திரும்பி உள்ளது. பள்ளி- கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்பட்டன.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான நாரிமன் பாயின்ட், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ்- ஓபராய் ஹோட்டல்கள் அமைந்துள்ள பகுதிகளில் வழக்கம் போல் போக்குவரத்து காணப்பட்டது.

இந்நிலையில் இயல்பு நிலை திரும்பியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஏஜென்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த தாஜ் ஓட்டல் மற்றும் பேலஸ் ஆகியவற்றை அதன் நிர்வாகத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

இதனை தாஜ் குழுமம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மகாராஷ்ட்ரா அடுத்த முதல்வர் ஷிண்டே ?
இயல்பு நிலைக்கு திரும்பியது மும்பை
மகா. முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ராஜினாமா
பயங்கரவாதம்: 2004 முதல் 7,000 பேர் பலி
மகா. துணை முதல்வர் பாட்டீல் ராஜினாமா
மத்திய அமைச்சரவை விலக வேண்டும்: பாஜக
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...