|
| மகாராஷ்ட்ரா அடுத்த முதல்வர் ஷிண்டே ? |
| புதுடெல்லி (ஏஜென்சி), 1 டிசம்பர் 2008 ( 15:55 IST ) | |
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சுசில் குமார் ஷிண்டே நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டம் தற்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுள்ளது.
மும்பையில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய 3 நாள் வெறியாட்டத்துக்கு போலீஸ் உயரதிகாரிகள், வெளிநாட்டினர் உள்பட 183 பேர் பலியாகினர். சுமார் 300 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோர் மீது மத்திய அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் நடைபெற்ற காரசார விவாதத்தைத் தொடர்ந்து சிவராஜ் பாட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.மும்பை தாக்குதலுக்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவதாக நேற்று அவர் அறிவித்தார்.
இதனிடையே மகாராஷ்ட்ரா முதலமைச்சர் தேஷ்முக்கும் தனது பதவி விலகல் முடிவை இன்று அறிவித்தார்.சனிக்கிழமையன்று நடைபெற்ற காரியக் கமிட்டிக் கூட்டத்திலேயே தாம் பதவி விலகுவதாக தெரிவித்துவிட்டதாகவும், இது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் இவ்வாறு கூறியபோதிலும் தேஷ்முக்கை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை அப்பதவியில் நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து விட்டதாகவே டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேஷ்முக்கிற்குப் பதிலாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பல்வேறு பெயர்களை காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வருவதாகவும், இதில் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த மத்திய மின்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவின் பெயர் முதலிடத்தில் இருப்பதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, காங்கிரஸ் மேலிடத்தின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து முன்கூட்டியே தெரிந்த, மகாராஷ்டிர மாநிலத்தின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. இக்கூட்டத்தில், மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் பதவிலிருந்து விலகும்படி ஆர்.ஆர்.பாட்டீலிடம் அக்கட்சியின் மேலிடம் கேட்டுக்கொண்டது.
இதை தொடர்ந்து, இன்று காலை தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஆர்.ஆர். பாட்டீல், தனது ராஜினாமா கடிதத்ததை முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிடம் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|