|
| இயல்பு நிலைக்கு திரும்பியது மும்பை |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008 ( 13:09 IST ) | |
பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
கடந்த புதன் கிழமை இரவு மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல், ஓபராய் ஹோட்டல் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 22 வெளிநாட்டவர்கள் உட்பட 183 பேர் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்புப் படையினர் மூன்று நாளாக நடத்திய கடும் போராட்டத்தில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் பின்னரே பீதியில் உறைந்திருந்த மும்பை நகரவாசிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில் 4 நாட்களுக்குப் பின் மும்பை நகரில் இன்று காலை முதல் இயல்பு நிலை திரும்பி உள்ளது. பள்ளி- கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்பட்டன.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான நாரிமன் பாயின்ட், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ்- ஓபராய் ஹோட்டல்கள் அமைந்துள்ள பகுதிகளில் வழக்கம் போல் போக்குவரத்து காணப்பட்டது.
அலுவலக நேரத்தில் நகரின் சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானதாகவும், புறநகர் மின்சார ரயில்களில் வழக்கம்போல் பயணிகள் நெரிசல் காணப்பட்டதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|