|
| மகா. முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ராஜினாமா |
| மும்பை (ஏஜென்சி), 1 டிசம்பர் 2008 ( 12:00 IST ) | |
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டம் தற்போது இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுள்ளது.
மும்பையில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய 3 நாள் வெறியாட்டத்துக்கு போலீஸ் உயரதிகாரிகள், வெளிநாட்டினர் உள்பட 183 பேர் பலியாகினர். சுமார் 300 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோர் மீது மத்திய அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.
இதன் எதிரொலியாக, உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகும்படி சிவராஜ் பாட்டீலை காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டது. இதன் காரணமாக, மும்பை தாக்குதலுக்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவதாக நேற்று அவர் அறிவித்தார்.
இதைதொடர்ந்து, மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் பதவியை பறிக்கவும் காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டது. முதல்வர் பதவியிலிருந்து விலகும்படி தேஷ்முக்கிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், அதன்படி தனது பதவி விலகல் கடிதத்தை தேஷ்முக் அனுப்பி வைத்துள்ளதாகவும் மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வர் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து முன்கூட்டியே தெரிந்த, மகாராஷ்டிர மாநிலத்தின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. இக்கூட்டத்தில், மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் பதவிலிருந்து விலகும்படி ஆர்.ஆர்.பாட்டீலிடம் அக்கட்சியின் மேலிடம் கேட்டுக்கொண்டது.
இதை தொடர்ந்து, இன்று காலை தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஆர்.ஆர். பாட்டீல், தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிடம் சமர்ப்பித்தார்.
இதை பெற்றுக்கொண்ட அடுத்த சில மணி நேரத்தில், விலாஸ்ராவ் தேஷ்முக்கும் தனது ராஜினாமா முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|