|
| பயங்கரவாதம்: 2004 முதல் 7,000 பேர் பலி |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008 ( 11:28 IST ) | |
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்ற கடந்த 2004ம் ஆண்டு முதல், நாட்டில் நடந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்களில் சுமார் 7 ஆயிரம் பேர் பலியாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும் இந்த தகவல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விபரம் மூலம் தெரியவந்துள்ளது.
அதன்படி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாம் ஆண்டில் (2004) 6,029 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் பலியானோரின் எண்ணிக்கை 1,721.
2005ம் ஆண்டில் 5,709 சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 1,598 பேர் பலியாகினர். 2006ல் நடந்த 5,240 சம்பவங்களில் 1,352 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை 4,907. இதில் பலியான உயிர்களின் எண்ணிக்கை 1,215. நடப்பு ஆண்டில் கடந்த செப்டம்பர் வரையிலான புள்ளி விபரத்தின்படி, 3, 157 சம்பவங்களில் 760 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கையை, கடந்த வாரம் நடந்து முடிந்த மும்பை பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் மேலும் அதிகரித்து விட்டது.
இந்த தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளதால், இந்த ஆண்டில் பலியானோரின் எண்ணிக்கையும் ஆயிரத்தை தொடும் அபாயம் உள்ளது.
40 பேரை பலிகொண்ட ஹைதராபாத் குண்டுவெடிப்பு, 68 பேரின் உயிரை குடித்த சம்ஜூதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு, 230 பேர் கோரமாக கொல்லப்பட்ட மாலேகான் மற்றும் மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் கடந்த வாரம் 200 பேரின் உயிருக்கு உலைவைத்த பயங்கரவாதிகளின் வெறியாட்டம் ஆகியவை ஐமுகூ ஆட்சியில் நடந்த மிகப்பெரிய தாக்குதல்கள்.
இந்த ஆட்சியில் மட்டும்தானா இந்த அவலம் என்று நினைக்க வேண்டாம். கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது நடந்த தாக்குதல்கள் இன்னும் குலை நடுங்க வைக்கும்.
அதாவது, தேமுகூ ஆட்சிக் காலத்தில் நடந்த தாக்குதல் சம்பங்களின் எண்ணிக்கை 36,259. இதில் பலியான அப்பாவி உயிர்களின் எண்ணிக்கை 11,714.
பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், அக்சார்தம் கோயில் மீதான தாக்குதல், ஜம்முவில் ராணுவ மையம் தகர்க்கப்பட்டது போன்றவை கடந்த ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களாக கருதப்படுகின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|