யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மகா. துணை முதல்வர் பாட்டீல் ராஜினாமா
மும்பை (ஏஜென்சி), 1 டிசம்பர் 2008   ( 10:19 IST )
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக, மகாராஷ்டிர துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மும்பையில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய 3 நாள் வெறியாட்டத்துக்கு போலீஸ் உயரதிகாரிகள், வெளிநாட்டினர் உள்பட 200க்கும் அதிகமானோர் பலியாகினர். 300 பேர் படுகாயம் அடைந்தனர்.

உலகையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோர் மீது கடும் அதிருப்தி நிலவியது.

ந்நிலையில், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று சிவராஜ் பாட்டீல் நேற்று பதவி விலகினார்.

முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் துணை முதல்வர் பாட்டீல் ஆகியோரும் பதவி விலக வேண்டும் பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இருவரும் பதவி வலக மறுத்தனர்.

இந்நிலையில், துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் இன்று காலை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கூட்டத்துக்கு பின்னர் ராஜினாமா முடிவை பாட்டீல் எடுத்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிடம் சமர்பித்த பாட்டீல், தனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ராஜினாமா முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும், இன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள பத்திரிகையாளர்களை சந்திப்பின் போது, தனது ராஜினாமா பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மத்திய அமைச்சரவை விலக வேண்டும்: பாஜக
'பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த பெடரல் புலனாய்வு அமைப்பு'
உள்துறை அமைச்சராக சிதம்பரம் நியமனம்
டெல்லிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்
மும்பை தாக்குதல்: சிவராஜ் பாட்டீல் ராஜினாமா
ஜம்மு-காஷ்மீ‌‌ரி‌ல் 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...