யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
'பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த பெடரல் புலனாய்வு அமைப்பு'
புதுடெல்லி (ஏஜென்சி), 1 டிசம்பர் 2008   ( 09:01 IST )
பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த 'பெடரல் புலனாய்வு அமைப்பு' ஏற்படுத்தப்படும். நாட்டின் முக்கிய இடங்களில் தேசிய பாதுகாப்புப் படையின் துணை பிரிவுகள் அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலின் எதிரொலியாக நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கூட்டியிருந்தார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:

மும்பை தாக்குதலால் நாடே கடும் கோபத்தில் உள்ளது. இதுபோன்ற சவால்களை அரசியல் ரீதியான கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து சமாளிக்க வேண்டும்.

மும்பை தாக்குதல் மற்ற தாக்குதல்களில் இருந்து வேறுபட்டது. இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நமது அமைப்பு முறையை பலப்படுத்துவது தொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்.

நிர்வாக சீர்திருத்த ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், பெடரல் புலனாய்வு நிறுவனம் அமைப்பு (பெடரல் இன்வஸ்டிகேஷன் ஏஜென்சி- எப்ஐஏ) அமைக்கப்படும்.

நமது கடல், வான் வழியாக தாக்குதல் நடைபெறுவதை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் கடற்படை, கடலோரக் காவல் படை, கடலோர காவல் படை, விமானப்படை, சிவில் விமானப் போக்குவரத்து ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

நாட்டில் பயங்கரவாத ஒழிப்பில் முதன்மையாக உள்ள தேசிய பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் வசதிகள் அளிக்கப்படும். நாட்டின் முக்கியப் பகுதிகளில், தேசிய பாதுகாப்புப் படையின் சிறிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.

மும்பையில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்க வேண்டும். உயிர் நீத்த பாதுகாப்புப் படையினருக்கும் மரியாதை செலுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்தில் மாலை 6.30 மணிக்கு நடந்த இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், பாஜக தலைவர்கள் ஜஸ்வந்த் சிங், மல்ஹோத்ரா, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் ஏ.பி. பரதன், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், சமாஜ்வாடி தலைவர்கள் முலாயம் சிங், அமர்சிங், திமுக, அதிமுக தலைவர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட சிலர் பங்கேற்கவில்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மகா. துணை முதல்வர் பாட்டீல் ராஜினாமா
மத்திய அமைச்சரவை விலக வேண்டும்: பாஜக
உள்துறை அமைச்சராக சிதம்பரம் நியமனம்
டெல்லிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்
மும்பை தாக்குதல்: சிவராஜ் பாட்டீல் ராஜினாமா
ஜம்மு-காஷ்மீ‌‌ரி‌ல் 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...