|
| உள்துறை அமைச்சராக சிதம்பரம் நியமனம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2008 ( 16:16 IST ) | |
உள்துறை அமைச்சர் பதவியை சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த இலாக்கா மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவியை சிவராஜ் பாட்டீல் இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து சிவராஜ் பாட்டீல் வகித்து வந்த உள்துறை இலாக்கா, நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக, தலைநகர் டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிதம்பரத்திடம் உள்ள நிதித்துறை இலாக்காவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
எம்.கே. நாராயணன் ராஜினாமா
சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதைத் தொடர்ந்து, மும்பை சம்பவத்துக்குப் பொறுப்பேற்று பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேபோல் மகராஷ்டிரா மாநில முதல்வர் விலாஷ்ராவ் தேஷ்முக்கும், மும்பை சம்பவத்துக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|