யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மும்பை தாக்குதல்: சிவராஜ் பாட்டீல் ராஜினாமா
டெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2008   ( 12:53 IST )
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று, பிரதமரிடம் தனது ராஜினாமா கடிதத்தை உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல் அளித்துள்ளார்.

நேற்றிரவு நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கொலை வெறியாட்டம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சிவராஜ் பாட்டீலின் அணுகுமுறைகளைக் குறைகூறியதாகத் தெரிகிறது.

இதன் பின்னர் பேசிய சிவராஜ் பாட்டீல், மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று அறிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் நேற்று கூட்டியிருந்த 2 கூட்டங்களுக்கும் சிவராஜ்பாட்டீல் அழைக்கப்படவில்லை.

இந்த பின்னணியில் உள்துறை அமைச்சர் பதவியை சிவராஜ் பாட்டீல் இன்று ராஜினாமா செய்துள்ளதாக, டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்த தகவல் தெரிவிக்கிறது.

எனினும் இது தொடர்பான அதிகாரபூர்வ செய்தி எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜம்மு-காஷ்மீ‌‌ரி‌ல் 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
தீவிரவாதத்தை கடுமையாக ஒடுக்க வேண்டும்: காங்கிரஸ்
டெல்லியில் இன்று அனை‌த்து ‌க‌ட்‌சி ‌கூ‌ட்ட‌ம்
மும்பை தாக்குதல் : மு‌க்‌கிய நகர‌‌ங்க‌ளுக்கு எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.பாதுகாப்பு ?
டெல்லி தேர்தல்: 60 சதவீத வாக்குப் பதிவு
மும்பை : 5,000 பேர்களை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதிகள்
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...