யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜம்மு-காஷ்மீ‌‌ரி‌ல் 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
ஸ்ரீநகர் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2008   ( 12:07 IST )
ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை அமைதியாகத் தொடங்கி, தற்போது நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தமுள்ள 87 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

ஏற்கனவே 2 கட்டத் தேர்தல் நடைபெற்றுவிட்ட நிலையில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கர்னா, குப்வாரா, ஹந்த்வாரா, லோலேப், லாங்கேட் ஆகிய 5 தொகுதிகளுக்கு இன்று 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இ‌ந்த 5 தொகு‌தி‌க‌ளிலு‌ம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. தொடக்கத்தில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு நண்பகலுக்கு மேல் சற்று விறுவிறுப்படைந்தது.

ஐந்து தொகுதிகளிலும் உள்ள மொ‌த்த வா‌க்காள‌ர்கள் எ‌‌ண்‌‌‌ணி‌க்கை 3,40,000 ஆகு‌ம். இவர்களுக்காக மொத்தம் 448 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தே‌ர்த‌ல் க‌ள‌த்‌தி‌ல் 5 பெண்கள் உட்பட 71 வே‌ட்பாள‌ர்க‌ள் உ‌ள்ளன‌ர். கு‌ப்வாரா தொகு‌தி‌யி‌ல் அ‌திகப‌ட்சமாக 19 வே‌ட்பாள‌ர்க‌ள் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர்.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளுமே பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகா‌ப்பு பல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. மாநில காவல்துறையினருடன் 109 பிரிவு படைவீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தீவிரவாதத்தை கடுமையாக ஒடுக்க வேண்டும்: காங்கிரஸ்
டெல்லியில் இன்று அனை‌த்து ‌க‌ட்‌சி ‌கூ‌ட்ட‌ம்
மும்பை தாக்குதல் : மு‌க்‌கிய நகர‌‌ங்க‌ளுக்கு எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.பாதுகாப்பு ?
டெல்லி தேர்தல்: 60 சதவீத வாக்குப் பதிவு
மும்பை : 5,000 பேர்களை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதிகள்
மும்பை தாக்குதல் : மு‌‌ப்படை தளப‌திக‌‌ளுட‌ன் ‌மன்மோகன் ஆலோசனை
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...