|
| தீவிரவாதத்தை கடுமையாக ஒடுக்க வேண்டும்: காங்கிரஸ் |
| புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2008 ( 11:54 IST ) | |
தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலை தொடர்ந்து காங்கிரஸ் செயற்குழு கூட்டம், அதன் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்றிரவு புதுடெல்லியில் அவசரமாகக் கூடியது.
சுமார் 3 மணி நேரம் வரை நீடித்த இக்கூட்டத்தில் மும்பை தாக்குதல் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு சவால் விடும் தீவிரவாதத்தை கடுமையான நடவடிக்கைகள் மூலம் மத்திய அரசு ஒடுக்க வேண்டும் என்று இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தனது மண்ணில் தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் செயல்களை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு, அந்த நாட்டுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன்சிங், நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதச் செயல்களை தனது அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் என்று உறுதியளித்தார்.
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி உட்பட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|