|
| மும்பை தாக்குதல் : முக்கிய நகரங்களுக்கு என்.எஸ்.ஜி.பாதுகாப்பு ? |
| புதுடெல்லி(ஏஜென்சி), சனிக்கிழமை, 29 நவம்பர் 2008 ( 20:07 IST ) | |
மும்பையில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்களுக்கு அடிக்கடி இலக்காகும் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேசியப் பாதுகாப்புப் படையான என்.எஸ்.ஜி. பாதுகாப்பு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தலைநகர் டெல்லியில் இருந்து மட்டுமே என்.எஸ்.ஜி. படையினர் இயங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்கான சிறப்புப் பயிற்சிகளை பெற்றுள்ள என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினர் சம்பவ இடத்தை அடைவதற்கான கால தாமதத்தை குறைப்பது அவசியம் என்பது மும்பை தாக்குதலைத் தொடர்ந்து உணரப்பட்டுள்ளது.
எனவே அச்சுறுத்தல் நிறைந்த நகரங்கள், பெரு நகரங்களில் நிரந்தர என்.எஸ்.ஜி. நிலையத்தை அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக டெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஜென்சி செய்திகள்
தற்போது இந்தோனேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கவனத்திற்கு இந்தப் பரிந்துரை கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர் ஒப்புதல் அளித்த பின்னர் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|