யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானதல்ல: கேரளா
திருவனந்தபுரம் (ஏஜென்சி), 25 நவம்பர் 2008   ( 10:04 IST )
'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று கேரள சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:

குமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தாலுகாவிற்கு நெய்யாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பது தொடர்பாக, தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண கேரளா தயாராக உள்ளது.

ஆனால் நெய்யாறு இரு மாநிலங்களுக்கும் பொதுவான ஆறு என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறுவதை ஏற்க முடியாது. நெய்யாற்றில் இருந்து விவசாயிகளுக்கு தண்ணீர் பெற்று தருவதற்குப் பதில் அதன் மீது உரிமை கொண்டாட வேண்டும் என்பதில் தான் தமிழக கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளலாம்.

நெய்யாற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக வரைவு ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் என்ன திருத்தங்கள் செய்யலாம் என்று கூறுவதற்கு பதில், புதிய வரைவு ஒப்பந்தம் ஒன்றை தமிழக அரசு அனுப்பி உள்ளது.

நெய்யாற்றில் இருந்து தண்ணீர் தருவதற்கு பணம் கேட்பதாக கேரளத்தின் மீது தமிழகம் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. குறைந்தபட்ச விநியோகச் செலவுகளை ஏற்ற வேண்டும் என்பது தான் கேரள அரசின் கோரிக்கை.

இவ்வாறு பிரேமசந்திரன் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பக்ளிஹார் அணை புகார் : இந்திய‌க் குழு‌வின‌ர் பா‌க்.பயண‌ம்
ஒரிஸ்ஸா : கந்தமாலில் தடையுத்தரவு
மராட்டியர்களை ஓரம் கட்டுகிறார் லாலு : பால் தாக்கரே புகார்
பிரதிபா பாட்டீல் வெளிநாடு பயணமானார்
விடுவிக்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் இந்தியா திரும்பினர்
பால் தாக்கரேவை சந்தித்தார் ராஜ் தாக்கரே
செய்திகள்
தேசியம் - மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...