யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பக்ளிஹார் அணை புகார் : இந்திய‌க் குழு‌வின‌ர் பா‌க்.பயண‌ம்
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 நவம்பர் 2008   ( 18:38 IST )
சீனா‌ப் ந‌தி‌யி‌ன் குறு‌க்கே இ‌ந்‌தியா க‌ட்டியு‌‌ள்ள ப‌க்‌ளிஹா‌ர் அணையா‌ல் தங்களுக்கு வரவேண்டிய நீ‌ரி‌ன் அளவு குறைந்துவிட்டது எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் கூறியுள்ள புகார் கு‌றி‌த்து ஆராய, இ‌ந்‌திய ‌நீ‌ர்வள ஆணைய‌ர் தலைமை‌யிலான குழு‌வின‌ர் பா‌கி‌ஸ்தா‌ன் செ‌ல்லவு‌ள்ளன‌ர்.

இ‌‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல் நே‌ற்று செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த பாகிஸ்தான் நீர் வள ஆணையத்தின் தலைவர் சையது ஜமாத் அலி ஷா, பக்ளிஹார் அணையா‌ல் சீனாப் நதியில் தங்களுக்கு வரவே‌ண்டிய நீர் வரத்‌தி‌ல் நொடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாற்றியிருந்தார்.

இது இரு நாடுகளுக்கு இடையிலான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று கூறிய அவ‌ர், இதனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள விவசாய உற்பத்தி இழப்பின் மதிப்பு 40 பில்லியன் ரூபாய் என்றா‌ர்.

ஆனால் இந்த குற்றச்சாற்றை மறுத்த இந்தியா, பக்ளிஹார் அணை கட்டியதால் நீர் வரத்து குறையவில்லை என்றும், இந்த ஆண்டு பருவ மழை குறைவாக பெய்ததால்தான் சீனாப் நதியில் நீர்வரத்து குறைந்ததற்கு உண்மையான காரணமென்றும் கூறியிருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் நீர் வள ஆணையத்தின் தலைவர் சையது ஜமாத் அலி ஷா தலைமையிலான 6 பே‌ர் கொ‌ண்ட குழு‌வின‌ர் கட‌ந்த அ‌க்டோப‌ர் 22 ஆ‌ம் தே‌தி பக்ளிஹார் அணைக்குச் சென்று பார்வையிட்டதையடு‌த்து, இ‌ந்‌திய‌க் குழு‌வின‌ர் வரு‌கிற ச‌‌னி‌க்‌கிழமை பா‌கி‌ஸ்தா‌ன் செ‌ல்லவு‌ள்ளன‌ர்.

இ‌ந்‌திய ‌நீ‌ர்வள ஆணைய‌ர் ர‌ங்கநாத‌ன் தலைமை‌யி‌லான இ‌ந்த‌க் குழு‌‌வின‌ர், பா‌கி‌ஸ்தா‌னி‌‌‌ல் ‌சீனா‌ப் ந‌தி பாய‌க்கூடிய ப‌ல்வேறு இட‌ங்களு‌க்கு‌ம் செ‌ன்று ஆ‌ய்வு செ‌ய்யவு‌ள்ளன‌ர்.




(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஒரிஸ்ஸா : கந்தமாலில் தடையுத்தரவு
மராட்டியர்களை ஓரம் கட்டுகிறார் லாலு : பால் தாக்கரே புகார்
பிரதிபா பாட்டீல் வெளிநாடு பயணமானார்
விடுவிக்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் இந்தியா திரும்பினர்
பால் தாக்கரேவை சந்தித்தார் ராஜ் தாக்கரே
தீவிரவாதிகளை ஒடுக்க சிறப்புப்படை: மன்மோகன் சிங்
செய்திகள்
தேசியம் - மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...