|
| ஒரிஸ்ஸா : கந்தமாலில் தடையுத்தரவு |
| புவனேஸ்வர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 நவம்பர் 2008 ( 17:26 IST ) | |
ஒரிஸ்ஸா மாநிலம் கந்தமால் மாவட்டத்தின் சில பகுதிகளில் மோதல் வெடிக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு அங்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் வெடித்த கலவரத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர் ; ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறி காடுகளிலும், அரசு முகாம்களிலும் தஞ்சம் புகுந்தனர்.
சுமார் 10,000 பேர் இன்னும் அரசு நிவாரண முகாம்களில்தான் தங்கியுள்ளனர்.
கந்தமாலில் சமீப நாட்களாக நிலை ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்ற நிலையில், அப்பாவி பழங்குடியினருக்கு எதிராக காவல் துறையினர் மேற்கொள்ளும் கொடுமைகளை கண்டித்து 'குயி கல்யாண் சமிதி ' என்ற அமைப்பு இன்று கண்டன ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது.
ஆனால் இந்த கண்டன ஊர்வலம், மீண்டும் இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தி விடலாம் என்பதால், கண்டன பேரணிக்கு காவல் துறையினர் 144 தடையுத்தரவு பிறப்பித்துவிட்டனர்.
இதன்படி ஒரு இடத்தில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூட முடியாது.
தடையுத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் கந்தமாலில் பதற்றம் காணப்படுகிறது.இதனால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது. |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|