|
| மராட்டியர்களை ஓரம் கட்டுகிறார் லாலு : பால் தாக்கரே புகார் |
| மும்பை (ஏஜென்சி), 24 நவம்பர் 2008 ( 13:26 IST ) | |
ரயில்வே பணிகளில் மராட்டியர்களை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஓரம் கட்டுவதாக சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே குற்றம் சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக தமது கட்சி பத்திரிகையான ' சாம்னா ' வில் எழுதியுள்ள தலையங்கத்தில் அவர் கூறியிருப்பதாவது :
" நான் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்தவன் ; மகாராஷ்ட்ரா எனக்கு சொந்தமானது " என்று லாலு கூறுகிறார்.அவருடைய ( லாலு ) கொள்கையே - தனக்கு சொந்தமானவையெல்லாம் தன்னுடயது; அதே சமயம் மற்றவர்களுக்கு சொந்தமானவையும் தன்னுடையவை என்பதுதான்.
சமீப காலமாக மராத்தியர்களுக்கு ரயில்வே பணி கிடைக்கவிடாமல் தடுக்கும்விதமாக ரயில்வே துறையை லாலு மலைப்பாம்பை போன்று கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்.
லாலு தன்னை மகாராஷ்ட்ராவைச் சேர்ந்தவன் எனக் கூறுவதால், அவர் அதனை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.ரயில் நிலையங்களில் சிவசேனாவால் ஊக்குவிக்கப்பட்டு நிறுவப்பட்ட ' வடா பாவ் ' கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும்.
ரயில் நிலையங்களில் ஒரு மேஜை போடுவதற்குரிய இடத்தை மராத்தி இளைஞர்களுக்கு லாலு அளித்தால் அதன் மூலம் 5000 பேருக்கு வேலை கிடைக்கும்.
மேலும் ' வடா பாவ் ' மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ஒரு உணவு ; அதனை மராட்டியர் அல்லாத ஒருவரால் சரியாக செய்ய முடியாது.குஜராத்தில் 'தோக்லா' வுக்காக இதேபோன்ற கடைகளை குஜராத்தியர்களுக்கு அளிக்கலாம்.அதேபோன்று தென்னிந்தியாவில் 'இட்லி சாம்பார் ' கடைகளை உள்ளூர்வாசிகளுக்கு அளிக்கலாம்.
லாலு எங்களது 'வடா பாவ்' வை ருசிக்க விரும்பினால் மும்பை சிவாஜி பார்க்கில் சிவசேனாவால் ஏற்பாடு செய்யப்படும் ' சிவ் வடா பாவ் சம்மேளனத்திற்கு 'தாராளமாக வரலாம்.
இவ்வாறு அதில் பால் தாக்கரே எழுதியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது. |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|