|
| பிரதிபா பாட்டீல் வெளிநாடு பயணமானார் |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 நவம்பர் 2008 ( 12:11 IST ) | |
வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாள் பயணமாக ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று புறப்பட்டுச் சென்றார்.
ஏசியான் பிராந்தியத்தில் முக்கிய நாடுகளாக அங்கம் வகிக்கும் மேற்கூறிய நாடுகளுடன் பொருளாதார மற்றும் இரு தரப்பு உறவுகள் வலுவடைய பிரதிபா பாட்டீலின் இந்த பயணம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதிபா தனது பயணத்தின்போது, மேற்கூறிய நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய இரு நாடுகளும் சமீப ஆண்டுகளாக சிறப்பான பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதிபாவின் இந்த பயணத்தின்போது இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் வியட்நாம் வர்த்தக சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.இந்த கூட்டத்தில் மேற்கூறிய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது. |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|