யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
விடுவிக்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் இந்தியா திரும்பினர்
மும்பை (ஏஜென்சி), 24 நவம்பர் 2008   ( 10:43 IST )
சோமாலியா கடற்கொள்ளையர்களால் இரண்டு மாதங்களுக்கு முன் கடந்தப்பட்ட 18 இந்தியர்களில் 5 பேர் இன்று காலை தாயகம் திரும்பினர்.

ஜப்பான் நாட்டின் எம்.டி. ஸ்டோல்ட் வாலர் என்ற கப்பல், கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இதில் 18 இந்தியர்கள் உட்பட மொத்தம் 22 பேரையும் கொள்ளையர்கள் பிணைக் கைதிகளாகச் சிறை பிடித்தனர்.

அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றால் 6 மில்லியன் அமெரிக்க டாலரை தர வேண்டும் என்று கடற் கொள்ளையர்கள் நிபந்தனை விதித்தனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.

இறுதியில் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் தருவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. இதையடுத்து பிணைக் கைதிகளாக இருந்த கப்பல் ஊழியர்கள் சில தினங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், விடுதலையான கப்பல் ஊழியர்களில் 5 பேர் இன்று காலை 6 மணியளவில் மும்பை திரும்பினர். கப்பலின் கேப்டன் பிரபாத் கோயல் உட்பட எஞ்சிய ஊழியர்கள் இன்று பிற்பகல் மும்பை வந்து சேருவார்கள் எனத் தெரிகிறது.

கொள்ளையர்களின் பிடியில் இருந்த 2 மாதங்களும் பயங்கர அனுபவமாக இருந்ததாக, விடுதலையானவர்கள் தெரிவித்தனர். தங்களை மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இதன் மூலம் சுமார் 2 மாதங்களாக நீடித்து வந்த இப்பிரச்னை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பால் தாக்ரேவை சந்தித்தார் ராஜ் தாக்கரே
தீவிரவாதிகளை ஒடுக்க சிறப்புப்படை: மன்மோகன் சிங்
2ம் கட்ட தேர்தல்: ஜம்முவில் வாக்குப்பதிவு துவங்கியது!
காஷ்மீர் : துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி
இந்து உணர்வை தூண்டி பா.ஜ.அரசியல் ஆதாயம் : இந்து மகாசபா
பொடா போன்ற சட்டம் கொண்டு வரப்படாது: சிவராஜ் பாட்டீல்
செய்திகள்
தேசியம் - மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...