|
| பால் தாக்கரேவை சந்தித்தார் ராஜ் தாக்கரே |
| மும்பை (ஏஜென்சி), 24 நவம்பர் 2008 ( 10:27 IST ) | |
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே, சிவசேனா கட்சித் தலைவர், பால் தாக்கரேவை சந்தித்துப் பேசினார்.
மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள பால் தாக்கரேவின் மாதோஸ்ரீ வீட்டில் நேற்று நடந்த இந்த சந்திப்பின்போது, பால் தாக்கரேவின் உடல் நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்து அறிந்து கொண்டதாகவும், அரசியல் உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் தாக்கரே, '2006 ஆம் ஆண்டு ஜனவரியில் பால்தாக்கரேவை சந்தித்தேன். அப்போது சில புத்தகங்களை என்னிடம் கொடுத்தார். அதைத் திருப்பிக் கொடுப்பதற்காக அவரை சந்தித்தேன்' என்றார்.
சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த இந்த சந்திப்பின் போது பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேவும் உடனிருந்தார். இரு தலைவர்களின் இந்த சந்திப்பு மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெற முயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது. |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|