|
| காஷ்மீர் : துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி |
| ஸ்ரீநகர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008 ( 17:55 IST ) | |
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிற நிலையில், தேர்தலை எதிர்த்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாராமுல்லா நகரில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்குமிடையே மோதல் வெடித்தது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் பலனில்லாமல் போகவே, துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் கான்போரா பகுதியைச் சேர்ந்த மன்சூர் அகமத் குமார் என்பவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.மேலும் இந்த மோதலில் 6 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே மன்சூர் முகமதுவை சுட்டது காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரின் பாதுகாவலர் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாற்றியுள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|