யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
இந்து உணர்வை தூண்டி பா.ஜ.அரசியல் ஆதாயம் : இந்து மகாசபா
புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008   ( 13:18 IST )
மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பா.ஜனதா கட்சி இந்து உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு பெமுயற்சிப்பதாக அகில பாரதிய இந்து மகாசபா குற்றம் சாற்றியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனைக் கூறிய அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் பிரவின் சர்மா, மேலும் கூறியதாவது :

பா.ஜனதா கட்சி இந்து மத உணர்வுகளை தூண்டிவிட்டு மீண்டும் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது.முன்னர் அந்த கட்சி ராம ஜென்ம பூமி பிரச்சனையை கிளப்பி அரசியல் ஆதாயம் அடைந்தது.தற்போது மாலேகாவ் குண்டு வெடிப்பு மற்றும் அது தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து தலைவர்களை பற்றிய உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது.

பா.ஜனதா மற்றும் சங் பரிவார் ஆகிய அமைப்புகள் இந்துக்களை ஏதாவது ஒரு பிரச்சனையை முன்பவைத்து இந்துக்களை முட்டாளாக்கி வருவது எங்களை சோர்ந்து போகச் செய்துவிட்டது.

இப்போது அவர்கள் மாலேகாவ் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு சட்ட உதவி அளிப்பதாக கூறி மக்களிடமிருந்து நிதி வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்.நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

மாலேகாவ் குண்டு வெடிப்பையோ அல்லது இதர பயங்கரவாத செயல்களையோ அகில இந்திய இந்து மகாசபா ஆதரிக்கவில்லை.

இதுவரை இந்துக்களுக்கும், இந்துத்வாவுக்கும் நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள் என்று பா.ஜனதா, விஎச்பி, பஜ்ரங் தளம், ஆர்எஸ்எஸ் மற்றும் அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளை கேளுங்கள் என்றார்.

இதனிடையே இந்து மகாசபாவின் இந்த குற்றச்சாற்று குறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேதக்ரிடம் கேட்டபோது, " காங்கிரஸ் கட்சி இந்த குற்றச்சாற்றுகளை கூறியிருந்தால் நாங்கள் அதற்கு பதிலளித்திருப்போம்.இவர்களுக்கு ( இந்து மகா சபா ) பதிலளித்து என்ன பயன் ஏற்படப்போகிறது ? என்ன அரசியல் முக்கியத்துவம் இருக்கிறது ? " என பதிலளித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பொடா போன்ற சட்டம் கொண்டு வரப்படாது: சிவராஜ் பாட்டீல்
சத்தீஸ்கர் : 478 வாக்காளர்கள் ; 510 வாக்குகள் பதிவு
ஜம்முவில் நாளை 2ஆம் கட்டத் தேர்தல்
புலிகளை ஜெயித்தாலும் வெற்றி கிடைக்காது : இந்தியா
பெ‌ட்ரோ‌ல் ‌விலை குறை‌ப்பு : நாடாளுமன்றத்தில் எழுப்ப முடிவு
கோ‌த்ரா கலவர வழ‌‌க்‌கு விசாரணை : 7 பே‌ர் கைது
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...