யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சத்தீஸ்கர் : 478 வாக்காளர்கள் ; 510 வாக்குகள் பதிவு
ராய்பூர் (ஏஜென்சி), 22 நவம்பர் 2008   ( 12:15 IST )
சத்தீஸ்கரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ரண்டாம் கட்ட தேர்தலின்போது, 478 வாக்காளர்களை மட்டுமே கொண்ட ஒரு வாக்குச் சாவடியில் 510 வாக்குகள் பதிவாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

ராய்பூர் மாவட்டம் அப்னாபூர் தொகுதிக்குட்பட்ட மானிக்சவுரி என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த 176 ம் எண் கொண்ட வாக்குச் சாவடியில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியிருப்பது அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த வாக்குச் சாவடிக்கு ஒதுக்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையே 478 தான்.ஆனால் வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் பதிவான வாக்கு சதவீதத்தை பார்க்கும்போதுதான் 510 வாக்குகள் பதிவாகியிருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த முறைகேட்டிற்கு துணை போன குற்றச்சாட்டின் பேரில் அந்த குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் பணியிலிருந்த 4 தேர்தல் பணியாளர்களையும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.அத்துடன் அந்த வாக்குச் சாவடியில் மறு தேர்தல் நடத்தவும் மாவட்ட தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜம்முவில் நாளை 2ஆம் கட்டத் தேர்தல்
புலிகளை ஜெயித்தாலும் வெற்றி கிடைக்காது : இந்தியா
பெ‌ட்ரோ‌ல் ‌விலை குறை‌ப்பு : நாடாளுமன்றத்தில் எழுப்ப முடிவு
கோ‌த்ரா கலவர வழ‌‌க்‌கு விசாரணை : 7 பே‌ர் கைது
இந்திராவால் தப்பித்தது இந்தியா : சோனியா
8 % பொருளாதார வளர்ச்சி உறுதி : மன்மோகன்
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...