யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜம்முவில் நாளை 2ஆம் கட்டத் தேர்தல்
ஸ்ரீநகர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008   ( 11:49 IST )
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2ஆம் கட்டமாக நாளை 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் மொத்தமுள்ள 87 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 17 ஆம் தேதி முதல் கட்டமாக பாண்டிபுரா, கார்கில், லே, பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

இந்நிலையில் 2 ஆம் கட்டமாக நாளை கந்தர்பால், கங்கன், நவுஷெரா, தர்ஹால், ரஜோரி மற்றும் கலாகோட் ஆகிய 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இத்தேர்தலில் மொத்தம் 4.94 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 530 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 81 வேட்பாளர்கள் 2 ஆம் கட்டத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒமர் அப்துல்லா, முன்னாள் அமைச்சர் காசி முகமது அப்சல் ஆகியோர் நாளைய தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

வாக்குப்பதிவு அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மொத்தம் உள்ள 530 வாக்குச் சாவடிகளில் பாதிக்கும் மேற்பட்டவை பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டு, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புலிகளை ஜெயித்தாலும் வெற்றி கிடைக்காது : இந்தியா
பெ‌ட்ரோ‌ல் ‌விலை குறை‌ப்பு : நாடாளுமன்றத்தில் எழுப்ப முடிவு
கோ‌த்ரா கலவர வழ‌‌க்‌கு விசாரணை : 7 பே‌ர் கைது
இந்திராவால் தப்பித்தது இந்தியா : சோனியா
8 % பொருளாதார வளர்ச்சி உறுதி : மன்மோகன்
சத்தீஸ்கர் : இறுதிக் கட்ட தேர்தலில் 68 % வாக்குப் பதிவு
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...