யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
புலிகளை ஜெயித்தாலும் வெற்றி கிடைக்காது : இந்தியா
புதுடெல்லி (ஏஜென்சி), 22 நவம்பர் 2008   ( 11:15 IST )
சிங்கள ராணுவம் விடுதலைப் புலிகளை ஜெயித்தாலும், மிழர் பிரச்சனையை தீர்ப்பதில் வெற்றி பெற முடியாது என்று இந்திய அரசு கருதுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் உள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும், அவர்கள் திருப்தியடையத் தக்க வகையில் அதிகாரத்தில் போதுமான இடமளிப்பதன் மூலமே இன பிரச்சனைக்கு இலங்கை அரசு அரசியல் ரீதியாக தீர்வு காண முடியும் என்று இந்திய அரசு நம்புகிறது.

இனப் பிரச்சனைக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது.ஒருவேளை அவர்கள் ( சிங்கள ராணுவம் ) கிளிநொச்சியை கைப்பற்றினாலும் விடுதலைப் புலிகள் நாட்டின் இதரப் பகுதிகளுக்கு பரவிச் சென்று தங்களது நடவடிக்கைகளை தொடரத்தான் செய்வார்கள்.

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டாலும் அது பிரச்சனையை தீர்க்காது.அது ஒரு வெற்றியாக வேண்டுமானால் இருக்கலாம் ; ஆனால் பிரச்சனைக்கு தீர்வாகாது.அதனால் ஏற்படுகிற பக்க விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும்.

இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணும் ஒரு பகுதியாக இலங்கை அரசு அதிகாரப்பரவல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

அதே சமயம் எல்டிடிஈ ஒரு பயங்கரவாதம் இயக்கம் என்பதிலும்,அந்த இயக்கம் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது என்றும் இந்தியா கருதுகிறது.

அதே சமயம் இலங்கையில் நடைபெறும் போரினால் சுமார் 2 லட்சம் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து மனிதாபிமான அடிப்படையில் இந்தியா கவலையுறுகிறது.

இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி எதையும் அளிக்கவில்லை.அதே சமயம் இந்தியாவின் பாதுகாப்பு கண்ணோட்டத்தை கருத்தில் கொண்டு மட்டும் சில உதவிகளை செய்து வருகிறது என அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காஷ்மீர் : துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி
இந்து உணர்வை தூண்டி பா.ஜ.அரசியல் ஆதாயம் : இந்து மகாசபா
பொடா போன்ற சட்டம் கொண்டு வரப்படாது: சிவராஜ் பாட்டீல்
சத்தீஸ்கர் : 478 வாக்காளர்கள் ; 510 வாக்குகள் பதிவு
ஜம்முவில் நாளை 2ஆம் கட்டத் தேர்தல்
பெ‌ட்ரோ‌ல் ‌விலை குறை‌ப்பு : நாடாளுமன்றத்தில் எழுப்ப முடிவு
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...