யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
இந்திராவால் தப்பித்தது இந்தியா : சோனியா
புதுடெல்லி (ஏஜென்சி), 21 நவம்பர் 2008   ( 16:05 IST )
தாராளமயமாக்கலை எச்சரிக்கையுடன் முன்னெடுத்து செல்ல வேண்டும் எனக் கூறியுள்ள சோனியா காந்தி, வங்கிகளை பொதுவுடைமையாக்கிய இந்திரா காந்தியின் நடவடிக்கையால்தான் தற்போதைய உலக பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியா பாதிக்காமல் தப்பித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கண்டு பேசிய சோனியா காந்தி, சர்வதேச பொருளாதார நெருக்கடியை பற்றி குறிப்பிட்டு, தாராளமயமாக்கலை தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென்றாலும், அது சமூக நீதியை பாதிக்காத அளவிற்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 60 ஆம் ஆண்டுகளின் இறுதியில் வங்கிகளை தேசியமயமாக்கியதை நியாயப்படுத்திய சோனியா, வங்கிகள் பொதுவுடைமையாக்கப்பட்டதால்தான் தற்போதைய சர்வதேச நிதி நெருக்கடியினால் பாதிப்புக்குள்ளாகாமல் அவை பத்திரமாக இருப்பதாக தெரிவித்தார்.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது சரியான நடவடிக்கைதான் என்பதை தற்போதைய ஒவ்வொரு நாளும் நிரூபிக்கிறது.இந்த புயலிலிருந்து மீண்டு வருகிற திறன் இந்தியாவுக்கு இருக்கிறது. இது குறித்து அச்சமடைய தேவையில்லை.

வெளிப்படையான மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத பொருளாதாரத்தின் மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.அதே சமயம் கட்டுப்பாடுகள் அடங்கிய காலக்கட்டத்திற்கு நாம் செல்லவேண்டிய அவசியமில்லை.

வளர்ச்சி என்பது ஒவ்வொரு தனி நபரின் வருமானம் எவ்வளவு என்பதல்ல.வளர்ச்சி தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையும் ஏழைகளை பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்று சோனியா மேலும் பேசினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
8 % பொருளாதார வளர்ச்சி உறுதி : மன்மோகன்
சத்தீஸ்கர் : இறுதிக் கட்ட தேர்தலில் 68 % வாக்குப் பதிவு
மாலேகாவ் : அத்வானியிடம் பாதுகாப்பு ஆலோசகர் விளக்கம்
குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பாதுகாக்கவும்: மத்திய அரசு
டிச.10 ல் நாடாளுமன்றம் கூடுகிறது
மாலேகாவ் குண்டு வெடிப்பு : சிவசேனா வழக்கு
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...