யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சத்தீஸ்கர் : இறுதிக் கட்ட தேர்தலில் 68 % வாக்குப் பதிவு
ராய்பூர் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008   ( 11:57 IST )
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற றுதிக்கட்ட சட்டசபை தேர்தலில் 68 சதவீதம் வாக்குகள் பதிவானது.

687 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் 50 பேர் பெண் வேட்பாளர்கள்.235 பேர் சுயேட்சை வேட்பாளர்கள்.

நேற்றைய தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகி, அவரது மனைவி ரேணு ஜோகி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் போட்டியிட்டனர்.

வாக்குப் பதிவு நடைபெற்ற மொத்தமுள்ள 51 தொகுதிகளில் 6 தொகுதிகள் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 15 பழங்குடியின பிரிவினருக்கும, 30 தொகுதிகள் பொதுத் தொகுதிகளுமாகும்.

வாக்குப் பதிவுக்காக மொத்தம் 2,608 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.வாக்குப் பதிவு நேற்று காலை துவங்கியதிலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மாலையில் வாக்குப் பதிவு முடிவடைந்தபோது சராசரியாக 68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 14 ஆம் தேதியன்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 39 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாலேகாவ் : அத்வானியிடம் பாதுகாப்பு ஆலோசகர் விளக்கம்
குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பாதுகாக்கவும்: மத்திய அரசு
டிச.10 ல் நாடாளுமன்றம் கூடுகிறது
மாலேகாவ் குண்டு வெடிப்பு : சிவசேனா வழக்கு
பா.ஜனதாவுக்கு தேசப்பற்று இல்லை : பவார்
கொலை வழக்கில் 21 சிபிஎம் தொண்டர்களுக்கு ஆயுள்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...