|
| மாலேகாவ் : அத்வானியிடம் பாதுகாப்பு ஆலோசகர் விளக்கம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008 ( 11:47 IST ) | |
மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சாமியார் பிரக்யா சிங் துன்புறுத்தப்படுவதாக புகார் கூறிய எதிர்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இன்று நேரில் சந்தித்து விசாரணையில் கிடைத்த தகவல்களை தெரிவித்து, அது தொடர்பாக விளக்க உள்ளார்.
மாலேகாவ் குண்டு வெடிப்பில் கைதான பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், தாம் மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாரால் துன்புறுத்தப்பட்டதாக கூறியதை சுட்டிக்காட்டி, அத்வானி பிரக்யா சிங்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் மன்மோகன் சிங் அத்வானியை நேரில் வரவழைத்து மாலேகாவ் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் கிடைத்த புலனாய்வு தகவல்களை அவருடன பகிர்ந்து கொண்டதோடு, இது தொடர்பாக மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையும் நியாயமானதுதான் என்பதையும் அத்வானியிடம் எடுத்துரைத்தார்.
இருப்பினும் அப்போதும் பெண் சாமியார் பிரக்யா சிங், தான் துன்புறுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததையறிந்து அதிகாரிகள் மீது தாம் மிகவும் கோபமுற்றதாகவும், இதே உணர்வு உங்களுக்கும் ( பிரதமருக்கு ) ஏற்பட்டிருக்கும் என்றும் அத்வானி கூறியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்க தெரிவித்தன.
இந்த சூழ்நிலையில்தான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இன்று அத்வானியை நேரில் சந்தித்து மாலேகாவ் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணையில் கிடைத்த தகவல்களை தெரிவித்து, அது தொடர்பாக விளக்க உள்ளார்.
இந்த சந்திப்பின்போது உளவுத் துறை ( ஐபி ) தலைவர் ஹல்தாரும் பங்கேற்பார் என மத்திய அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனை பா.ஜனதா கட்சியும் உறுதிபடுத்தியுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|