|
| குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பாதுகாக்கவும்: மத்திய அரசு |
| புதுடெல்லி (ஏஜென்சி) , 21 நவம்பர் 2008 ( 09:24 IST ) | |
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தடயவியல் ஆதாரங்களை சேகரிக்கும் வரை, அந்த இடத்தில் வேறு எந்த நிகழ்வும் ஏற்படாதவாறு பாதுகாக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறைச் செயலாளர் குப்தா கூறியதாவது:
குண்டு வெடிப்புகள் நடந்த சிறிது நேரத்திலேயே அந்த இடத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை உருவாக்க வேண்டும்.
குற்றச் செயலிற்கான ஆதாரங்கள் பாதிக்கப்படாமல் இருந்தால், தடவியல் ஆதாரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்.
குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்குள் அனுமதி இல்லாமல் வேறு எந்த நபரையும் அனுமதிக்கக் கூடாது. இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில், அந்த இடங்களுக்கு தடயவியல் நிபுணர்கள் வரும் முன்பே அங்கிருந்த தடயங்கள் அழிந்துவிட்டதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் இந்த அறிவுரையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|