|
| டிச.10 ல் நாடாளுமன்றம் கூடுகிறது |
| புதுடெல்லி (ஏஜென்சி),, 21 நவம்பர் 2008 ( 08:42 IST ) | |
பரபரப்பான அரஸியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் வரும் 10 ஆம் தேதி கூடுகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது. இதன் 2வது கூட்டத்தொடர் டிசம்பர் 10ம் தேதி தொடங்குகிறது. மாநிலங்களவையும் 10ம் தேதி கூடுகிறது.
இந்த கூட்டத்தொடர் வரும் 23 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தகவலை மக்களவை செயலகம் நேற்று அறிவித்தது.
இந்த கூட்டத்தொடரில் ஏற்கனவே கிடப்பில் கிடக்கும் மசோதாக்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
அதோடு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, மும்பையில் வட இந்தியர்கள் தாக்கப்பட்ட விவகாரம், மாலேகாவ் குண்டுவெடிப்பு பிரச்சனை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை கையில் எடுத்து எதிர்கட்சிகள் புயலை கிளப்பும் என்று தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|