|
| மாலேகாவ் குண்டு வெடிப்பு : சிவசேனா வழக்கு |
| மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008 ( 17:43 IST ) | |
மாலேகாவ் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை சிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டுமென்று கோரி சிவசேனா சார்பில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், மாலேகாவ் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரை துன்புறுத்திய தீவிரவாத தடுப்பு பிரிவு ( ஏடிஎஸ் ) போலீஸாருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சிவசேனாவின் கிளை அமைப்பான பாரதிய வித்யார்த்தி சேனாவின் செயலாளரான ஷில்பா தேஷ்முக், தாமாகவே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், தமது கட்சி சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஊடகங்களில் வந்த தகவலின் அடிப்படையில் மட்டும் மாலேகாவ் குண்டு வெடிப்பு தொடர்பாக ஏடிஎஸ் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், இது ஏடிஎஸ் சின் ஒருதலைபட்சமான போக்கையே காட்டுவதாக உள்ளதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.
மேலும் 'சிமி'போன்ற இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிராக ஏடிஎஸ் மென்மையான போக்கையே கடைபிடிப்பதாகவும் அவர் அந்த மனுவில் குற்றம் சாற்றியுள்ளார்.
இந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|