|
| பா.ஜனதாவுக்கு தேசப்பற்று இல்லை : பவார் |
| புதுடெல்லி (ஏஜென்சி), 20 நவம்பர் 2008 ( 17:05 IST ) | |
பா.ஜனதா கட்சி தேசப்பற்று இல்லாமல் இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஷரத் பவார் குற்றம் சாற்றியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பவார், மாலேகாவ் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணைக்கு எந்த ஒரு அரசியல் கட்சியாவது ஆட்சேபணை தெரிவித்தால் அது அநியாயமானதும், தேசப்பற்று இல்லாததுமாகும் என்று கூறினார்.
மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கொண்டு வரும் நடவடிக்கை தேர்தல் தந்திரம் என்று பா.ஜனதா கூறியுள்ள நிலையில், அந்த கட்சிக்கும் உங்களது விமர்சனம் பொருந்துமா எனக் கேட்டபோது, விசாரணை குறித்து ஆட்சேபணை தெரிவிக்கும் அனைவரையுமே தாம் குறிப்பிடுவதாக பதிலளித்த பவார், " விசாரணை நடவடிக்கைகளில் ஏன் இவர்கள் தலையிடுகிறார்கள் ? " என கேள்வி எழுப்பினார்.
மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக முதலில் பெண் சாமியார் பிரக்யா தாகூர் கைது செய்யப்பட்டதும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும் எவ்வாறு கருத்து வெளியிடுவது என்று பா.ஜனதாவுக்கு தெரியவில்லை.
ஆனால் இப்போது அக்கட்சியின் பிரதமருக்கான வேட்பாளர் அத்வானி, மாலேகாவ் குண்டு வெடிப்பு நடவடிக்கைகளை, மத்தியில் ஆட்சியிலுள்ள ஐ.மு.கூட்டணியின் அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்வதாக குற்றம் சாற்றுகிறார்.
இந்து அடிப்படைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என நான் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன்.ஒரு தீவிரவாதிக்கு மதமே கிடையாது.
மராத்தியர்களுக்கும் பீகார் மாநிலத்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிளவு தொடர்பான விவகாரத்தில் பீகார் அரசியல்வாதிகள் நதந்து கொள்ளும் விதம் ஏமாற்றமளிப்பதாக உள்ளது.இந்த விவகாரத்தை பெரிதாக்குவதில் ஊடகங்கள்தான் முக்கிய காரணமாகும்.
மும்பை மற்றும் மகாராஷ்ட்ராவின் சகிப்புத்தன்மை பற்றி பேசுகிறார்கள்.மும்பையில் மராத்தி பேசும் மக்கள் 24 சதவீதம் பேர்தான்.வேறெந்த மாநில தலைநகரிலும் 74 சதவீத மக்கள் மற்ற மாநிலத்தவர்கள் உள்ளனரா ? காட்டுங்கள் பார்ப்போம்.
இதுவா சகிப்புத்தன்மையின்மை ?மும்பையில் நாங்கள் 'காஸ்மோ பாலிட்டன்' கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளோம் என்று மேலும் கூறினார் பவார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|