|
| கொலை வழக்கில் 21 சிபிஎம் தொண்டர்களுக்கு ஆயுள் |
| ஹூக்ளி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008 ( 16:17 IST ) | |
கொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 21 பேருக்கு ஹூக்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதியன்று, ஹூக்லி மாவட்டம் புலுண்டி கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் அணி தலைவர் ஜாஹூர் அலி என்பவர், மசூதியிலிருந்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு கடந்த இரண்டாண்டு காலமாக ஹூக்ளி நீதிமன்றத்தில் நடைபெற்றது.இந்நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செங்குப்தா, இவ்வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட அதே கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவர் அஸ்கர் அலி உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 21 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|