யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
இலங்கை பிரச்சனைக்கு அரசியல் தீர்வு : ரணில் வலியுறுத்தல்
சென்னை/ புதுடெல்லி (ஏஜென்சி),, 20 நவம்பர் 2008   ( 16:00 IST )
இலங்கை இனப் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமரும், இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித் தலைருமான ரணில் விக்கிரமசிங்கே, வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி மற்றும் மதுரை கோவில்களில் வழிபாடு நடத்த செல்லும் வழியில் சென்னை வந்த ரணில், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது போர் நிறுத்தம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ரணில்,இலங்கையில் தற்போது உள்ள நிலையில் போர் நிறுத்தம் சாத்தியமல்ல என்றும், போர் நிறுத்தம் சரிப்பட்டு வராது என்றும் தாம் கருதுவதாக கூறினார்.

எனது இந்திய பயணத்தின்போது பிரணாப் முகர்ஜியுடன் விரிவாகப் பேசினேன்.அவர் இந்தப் பிரச்சினையை சிறப்பாக கையாண்டு வருகிறார்.பா.ஜனதா தலைவர் அத்வானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசியபோது, இதே கருத்தை தெரிவித்தேன்.இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இந்திய தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்தத்தால் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் வந்து விடாது.அரசியல் தீர்வு ஒன்றே பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி.இலங்கை இனப் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.

தமிழர் தேசிய கட்சிகளும், முஸ்லீம் கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பேச்சு நடத்தி, இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும்.அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும்.

வன்னியில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடைகள், இருக்க இடம் ஆகியவை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மீனவர்கள் பிரச்சினை அவ்வப்போது தலை தூக்கி வருவது வருத்தமளிப்பதாக உள்ளது.இது தவிர்க்கப்பட வேண்டும்.

2005ஆம் ஆண்டிலேயே இலங்கையும், இந்தியாவும் உடன்பாடு செய்துகொண்டிருந்தால் இன்று இலங்கை கடற்படையுடன் அடுக்கடி ஏற்படும் மோதல்களை தவிர்த்திருக்கலாம்.

இந்தப் பிரச்சினை குறித்து விரிவாக பேச நான் விரும்பவில்லை.அவ்வாறு பேசினால் அடுத்த நாட்டின் விவகாரத்தில் நான் தலையிடுவதாக அமைந்தவிடும் என்று ரணில் மேலும் தெரிவித்தார்.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாலேகாவ் குண்டு வெடிப்பு : சிவசேனா வழக்கு
பா.ஜனதாவுக்கு தேசப்பற்று இல்லை : பவார்
கொலை வழக்கில் 21 சிபிஎம் தொண்டர்களுக்கு ஆயுள்
சத்தீஸ்கரில் 56 தேர்தல் அதிகார்கள் இடைநீக்கம்
சத்தீஸ்கர் தேர்தல் : அஜித் ஜோகி வாகனம் மீது தாக்குதல்
எல்லையில் பங்காளதேஷ் பிரஜைகள் 2 பேர் கைது
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...