யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சத்தீஸ்கர் தேர்தல் : அஜித் ஜோகி வாகனம் மீது தாக்குதல்
ராய்பூர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008   ( 14:06 IST )
சத்தீஸ்கரில் இன்று 51 சட்டசபை தொகுதிகளில் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகி சென்ற வாகனம் மீது தாக்குதல் நடைபெற்றது.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 51 தொகுதிகளில் அஜித் ஜோகி போட்டியிடும் மார்வாகி தொகுதியும் அடங்கும்.

இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் தனது தொகுதியில் அஜித் ஜோகி சென்று கொண்டிருந்தபோது, அவரது காரை குறி வைத்து கைகளில் ஆயுதங்களுடன் திரண்டிருந்த கும்பல் ஒன்று கல்வீசி தாக்கியது.

இந்த தாக்குதலில் கார் கண்ணாடி சேதமடைந்தபோதிலும், அஜித் காயமின்றி தப்பினார்.

இந்த கல்வீச்சு தாக்குதலை உறுதி செய்த மாநில போலீஸ் டிஜிபி, தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
எல்லையில் பங்காளதேஷ் பிரஜைகள் 2 பேர் கைது
சத்தீஸ்கர் : இறுதிக் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது
' தாதா‌க்களுட‌ன் இ‌ந்‌திய‌ன் முஜாஹ‌ி‌தீ‌ன் தொட‌ர்பு '
ஒரிஸ்ஸா: பலாத்காரம் செய்யப்பட்ட பெண் வாக்குமூலம்!
உ.பி. சாலை விபத்தில் 8 பேர் பலி
'பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் அப்சல் குரு மரண தண்டனை நிறைவேற்றப்படும்'
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...