|
| எல்லையில் பங்காளதேஷ் பிரஜைகள் 2 பேர் கைது |
| ஜம்மு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008 ( 12:43 IST ) | |
இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பங்காளதேஷ் பிரஜைகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகித்திற்கு இடமளிக்கும் வகையில் இரண்டு பேர் சர்வதேச எல்லைப் பகுதியை நோக்கி செல்வதை பார்த்தனர்.
இதனையடுத்து அவர்களை உடனடியாக நிற்குமாறு ராணுவ வீரர்கள் எச்சரித்தனர்.ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
இருப்பினும் ராணுவத்தினர் அவர்களை பிடித்து சோதனையிட்டனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் பங்காளதேஷைச் சேர்ந்த சாதிக் மியான், அப்துல் மாலிக் என்பது தெரிய வந்தது.அவர்களை சோதனையிட்டதில் அவர்களிடமிருந்த 175 அமெரிக்க டாலர்கள், 4,300 ரூபாய் மதிப்பிலான இந்திய மற்றும் பங்காளதேஷ் கரன்சிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
பின்னர் அவர்கள் இருவரும் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|