யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சத்தீஸ்கர் : இறுதிக் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது
ராய்பூர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008   ( 10:08 IST )
சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று நடைபெறும் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தலில் 51 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு காலை துவங்கியது.

687 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் 50 பேர் பெண் வேட்பாளர்களாவர்.235 பேர் சுயேட்சை வேட்பாளர்களாவர்.

ஏறக்குறைய 88,14,228 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்களாவர்.

இன்றைய தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகி, அவரது மனைவி ரேணு ஜோகி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.

வாக்குப் பதிவு நடைபெறும் மொத்தமுள்ள 51 தொகுதிகளில் 6 தொகுதிகள் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 15 பழங்குடியின பிரிவினருக்கும, 30 தொகுதிகள் பொதுத் தொகுதிகளுமாகும்.

இன்றைய வாக்குப் பதிவுக்காக மொத்தம் 2,608 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் 355 தொகுதிகள் அதிக பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 14 ஆம் தேதியன்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 39 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
' தாதா‌க்களுட‌ன் இ‌ந்‌திய‌ன் முஜாஹ‌ி‌தீ‌ன் தொட‌ர்பு '
ஒரிஸ்ஸா: பலாத்காரம் செய்யப்பட்ட பெண் வாக்குமூலம்!
உ.பி. சாலை விபத்தில் 8 பேர் பலி
'பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் அப்சல் குரு மரண தண்டனை நிறைவேற்றப்படும்'
இந்திராகாந்தி பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!
சோமாலியா கடற்கொள்ளையர் கப்பல் மூழ்கடிப்பு
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...