|
| ' தாதாக்களுடன் இந்தியன் முஜாஹிதீன் தொடர்பு ' |
| மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 18:01 IST ) | |
சிறையிலும், தலைமறைவாகவும் இருக்கும் பல்வேறு நிழலுக தாதாக்களுடன் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நிதி மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் பஸ்லூர் ரகுமான் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதும், இஸ்லாமிய இயக்கம் ஒன்றிற்கு கொடுப்பதற்காக அவர்கள் நிதி திரட்டியதும் தெரிய வந்துள்ளது.
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருக்கும் பஸ்லூர் ரகுமானிற்கும் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான ரியாஸ் பட்காலிற்கும் தொடர்பிருப்பதாக ஏற்கெனவே விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து மேலும் விரிவாக விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|