யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஒரிஸ்ஸா: பலாத்காரம் செய்யப்பட்ட பெண் வாக்குமூலம்!
புவனேஸ்வர் (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008   ( 15:52 IST )
ஒரிஸ்ஸா மதக்கலவரத்தின்போது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலிடமிருந்து ஓர் இந்து பிரமுகரே தன்னை காப்பாற்றியதாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி கந்தமால் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஸ்வாமி லட்சுமானந்த சரசுவதி உள்ளிட்ட 5 பேர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் எதிரொலியாக ஆகஸ்ட் 25ஆம் தேதி ஒரிஸ்ஸாவில் பந்த் நடத்தப்பட்டது. அப்போது, பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். கிறிஸ்தவ தேவாலயங்களை சேதப்படுத்தினர். பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளையும் தாக்கினர்.

அப்போது, கந்தமாலில் ஓர் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்த மதவெறி கும்பல் 29 வயது நிரம்பிய கன்னியாஸ்திரியை பாதிரியார் கண் முன்னரே பலாத்காரம் செய்தது.

இந்த சம்பவத்துக்கு பின்னர், பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரி பாதுகாப்பு கருதி டெல்லி சென்றுவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக கந்தமால் போலீசார் டெல்லி சென்று கன்னியாஸ்திரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசாரிடம் சுமார் 3 மணி நேரம் கண்ணீர் வாக்குமூலம் கொடுத்தார் கன்னியாஸ்திரி.

மதவெறி கும்பல் தன்னை பலாத்காரம் செய்து ஓய்ந்த பின்னர், மேலும் 2 பேர் வந்து தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அப்போது அதிர்ஷ்டவசமாக ஓர் இந்து பிரமுகர் வந்து அந்த கும்பலிடமிருந்து தன்னை காப்பாற்றியதாகவும் கன்னியாஸ்திரி கூறியுள்ளார்.

தன்னை பலாத்காரம் செய்தவர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்று கூறிய அவர், தான் சுயநினைவு இல்லாமல் மயங்கிவிட்டதால் கடைசியாக தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற 2 நபர்களை அடையாளம் காட்ட இயலாது என்று தெரிவித்துள்ளார்.

இனி, கந்தமால் நகருக்கு வர தனக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மதக் கலவரத்தின் போது, கிறிஸ்தவ அனாதை ஆசிரத்தில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்த இந்து மதத்தை சேர்ந்த ஓர் இளம்பெண்ணையும், கிறிஸ்தவப் பெண் என தவறாக கருதி அவரை மதவெறி கும்பல் பலாத்காரம் செய்து, தீவைத்து எரித்துக்கொன்றது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உ.பி. சாலை விபத்தில் 8 பேர் பலி
'பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் அப்சல் குரு மரண தண்டனை நிறைவேற்றப்படும்'
இந்திராகாந்தி பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!
சோமாலியா கடற்கொள்ளையர் கப்பல் மூழ்கடிப்பு
டிச. 20 முதல் முதல் லாரிகள் ஸ்டிரைக்
13 ஆண்டுக்குப்பின் எகிப்து அதிபருக்கு நேரு விருது
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...