யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
'பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் அப்சல் குரு மரண தண்டனை நிறைவேற்றப்படும்'
புதுடெல்லி(ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008   ( 13:36 IST )
பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட ரண தண்டனை நிறைவேற்றப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் வி.கே.மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு இன்னும் அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தமது கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுப் பேசிய பா.ஜனதா முதலமைச்சர் வேட்பாளார் மல்ஹோத்ரா, பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அப்சல் குருவுக்கான தண்டனை நிறைவேற்றப்படும் என்றார்.

டெல்லியில் தற்போது ஆட்சியிலுள்ள காங்கிரஸ் அரசுதான் அப்சல் குருவுக்கான தண்டனையை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்து வருவதாக அவர் குற்றம் சாற்றினார்.

மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டுமென்றாலும், அது தொடர்பான கோப்பு டெல்லி முதலமைச்சர் ஷீல தீட்சித் அரசிடம்தான் கடந்த இரண்டாண்டு காலமாக உள்ளது.

அவர் இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையையும் தொடங்கவில்லை.அவர் அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தால்தான் அது குறித்து மத்திய அரசை எங்களால் வலியுறுத்த முடியும் என்று அவர் மேலும் கூறினார்.




(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்திராகாந்தி பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!
சோமாலியா கடற்கொள்ளையர் கப்பல் மூழ்கடிப்பு
டிச. 20 முதல் முதல் லாரிகள் ஸ்டிரைக்
13 ஆண்டுக்குப்பின் எகிப்து அதிபருக்கு நேரு விருது
பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நட்வர்சிங் நீக்கம்
மீண்டும் அரசியலுக்கு திரும்புகிறார் கோவிந்தாச்சார்யா
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...