யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
இந்திராகாந்தி பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008   ( 13:22 IST )
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 91வது பிறந்தநாளையொட்டி, இன்று அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாள், தேசிய ஒருமைப்பாட்டு வார துவக்க நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இதற்கான இன்றைய துவக்க நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசித்தார். இதன் நிறைவுநாளான வரும் 25ஆம் தேதி கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த வாரம் முழுவதும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான பொதுக்கூட்டம், கருத்தரங்கு, சிறப்பு இலக்கிய விழாக்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்துமாறு மாநில அரசுகளை உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாதி, மத வேறுபாடுகளற்ற, தேசிய ஒருமைப்பாட்டு தகவல்களை மக்களுக்கு கொண்டுசெல்லலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னையில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலும் இந்திராகாந்தியின் உருவப்படத்துக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சோமாலியா கடற்கொள்ளையர் கப்பல் மூழ்கடிப்பு
டிச. 20 முதல் முதல் லாரிகள் ஸ்டிரைக்
13 ஆண்டுக்குப்பின் எகிப்து அதிபருக்கு நேரு விருது
பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நட்வர்சிங் நீக்கம்
மீண்டும் அரசியலுக்கு திரும்புகிறார் கோவிந்தாச்சார்யா
பார்வையற்றோர் ஓட்டு போட புதிய வாக்குச்சீட்டு!
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...