யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சோமாலியா கடற்கொள்ளையர் கப்பல் மூழ்கடிப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008   ( 12:12 IST )
நடுக்கடலில் கப்பல்களை தாக்கி, கொள்ளையடித்து வரும் சோமாலியா கடற்கொள்ளையர்களின் கப்பலை இந்திய கடற்படையினர் தாக்கி மூழ்கடித்துள்ளனர்.

வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் சோமாலியா நாட்டில் ஏராளமான கடற்கொள்ளையர்கள் உருவாகியுள்ளனர். வர்கள், அந்நாட்டு கடல் பகுதி வழியாக செல்லும் பிறநாட்டு கப்பல்களை நடுக்கடலில் வழி மறித்து தாக்கி, கொள்ளையடித்து வந்தனர்.

கடந்த வாரம் இந்தியா மற்றும் சவுதி அரேபியாவுக்கு சொந்தமான 2 கப்பல்களை சோமாலியா கடற்கொள்ளையர்கள் நடுக்கடலில் மடக்கி, கடத்த முயன்றனர்.

எனினும், இந்திய கடற்படையினர் எதில் தாக்குதல் நடத்தி அவர்களிடமிருந்து கப்பல்களை மீட்டனர்.

இந்நிலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். தபார்' என்ற கப்பல் ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சோமாலிய கடற்கொள்ளையர்கள் இந்திய கப்பலை நோக்கி தாக்குதல் நடத்தினர்.

இதை தொடர்ந்து, இந்திய கடற்படையினர் கடுமையான எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் சோமாலியா கடல் கொள்ளையர்களின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டிச. 20 முதல் முதல் லாரிகள் ஸ்டிரைக்
13 ஆண்டுக்குப்பின் எகிப்து அதிபருக்கு நேரு விருது
பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நட்வர்சிங் நீக்கம்
மீண்டும் அரசியலுக்கு திரும்புகிறார் கோவிந்தாச்சார்யா
பார்வையற்றோர் ஓட்டு போட புதிய வாக்குச்சீட்டு!
உள்ளூர்வாசிகளுக்கே 80% வேலைவாய்ப்பு: மகா. அரசு
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...